வாணியம்பாடியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

வாணியம்பாடியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் காயஸ் ஹமத், நகராட்சி அணையாளர் முஸ்தப்ப ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் நகர பகுதியில் செயல்படுத்த உள்ள பணிகள் மற்றும் வரவு செலவு உள்ளிட்ட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதிகுமார், நாசிர்கான், அருள், பிரகாஷ், கலைச்செல்வன், தவுலத் பாஷா, ரஜினிகாந்த், அபிப் தங்கல்,நியமுதுல்லா, சித்ரா, பத்மாவதி, மஹபுன்னிசா, நௌமான், சாந்தி,நூஸ்ரத்துன்னிசா, முகமது அனீஸ், நசிமுன்னிசா பேகம்,நபீலா,பல்கீஸ் சலீம், ஷாயீன் பேகம், பஷீர், கலீம் பாஷா, இக்பால் அஹமத், கனகவல்லி, ராஜலட்சுமி, பரிதாபானு, ஆஷா பிரியா, சுல்தானா, ஜஹீர் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்  பு.லோகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad