கடலூர் மாவட்டம் வடலூர் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வரும் பேசஞ்சர் ரயில் கடப்பதற்காக இரவு ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில் பண்ருட்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர்.
தொடர்ந்து ரயில் சென்ற பின் கேட்டு திறக்கப்பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர், இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அப்பொழுது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென எதிர் திசையில் வரிசையை மிஞ்சியவாறு எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தினார்.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பேருந்து நடத்துனூருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக