மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபாக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபாக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபாக் கூட்டம் 26.01.2025 அன்று 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-2025-யில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், கிராம வறுமை குறைப்புத் திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து முழுமையான செயல் திட்டமாக தயாரித்தல் ஆகியவை குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.


எனவே, இக்கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு  கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபை கூட்டத்தில் விவாதித்திட வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி, தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad