பாரம்பரியமிக்க திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கல்வி பணியில் 75ம் ஆண்டு பவளவிழா காணவிருக்கும் சூழலில், கல்லூரியிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக துபாயில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக அப்துல் வாஹிது இறைவசனம் ஓதியதை தொடர்ந்து, அழைப்பினை ஏற்று வருகைப்புரிந்த அனைவரரையும் ஏஜிஎம் பைரோஸ் கான் வரவேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து துணை தலைவர் ஜாஃபர் சித்திக் அவர்கள் விழா தலைமையுரையாற்றி கடந்த 28 ஆண்டுகாலமாக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் செய்த சேவைகளை குறிப்பிட்டு பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய பொதுசெயலாளர் முனைவர் செய்யது அலி பாதுஷா, கல்லூரியின் துணை செயலாளர் முனைவர் அப்துல் சமது, விடுதி இயக்குனர் முஹம்மது பாசில், கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமல்ரெத்தினம், பொருலாளர் ஜமால் முஹம்மது, கல்லுரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான காஜா நஜ்முதீன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்தவர்களெல்லாம் அயல்நாட்டில் இருந்தாலும் வரலாற்ற எழுத கூடியவர்களாக இருக்கின்றனர் எனவும், கல்லூரி வளரச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அதிகமதிகம் இருக்கின்றது எனவும், அதன் மூலம் கல்வி பணியை சிறப்பான முறையில் செய்ய முடிகிறது எனவும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 அன்று நடைப்பெறும் முன்னாள் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்தனர். அதனை தொடர்ந்து பேசிய அமீரக பிரிவு பொதுசெயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் அவர்கள் முன்னாள் மாணவர் சங்கம் செய்து வரும் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டமிடல் குறித்தும் விரிவாக பேசினார். அமீரகத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சிகரம் தொட்ட ஜமாலியன் விருதுகள் லேண்ட் மார்க் குரூப் செய்யது முஹம்மது சாதிக், அல் மஜாரா ஜாஹிர் உசேன், ஆடிட்டர் முஹம்மது அனஸ், அப்துல் காதர், Dr. நஸ்ருல்லாஹ், சூப்பர் சோனிக் சாகுல் ஹமீது, காயிதே மில்லத் பேரவை பரக்கத் அலி உள்ளிட்டோருக்கும், அமீரக ஆளுமை விருதுகள் Dr. லயா ராஜேந்திரன், பவர்குரூப் ஜாஹிர் உசேன், தொப்பிவாப்பா குரூப் ஒமர் முக்தார், ஐஏஎஸ் அகடமி முஹம்மது பிகே, ஜபேல் ஜாய்ஸ் வாட்டர் ஷெரிஃப், ஸ்மார்ட் லைஃப் ரெக்ஸ் பிரகாஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வை மன்னர் மன்னன் மற்றும் முஹம்மது அனீஸ் ஆகியோர் தொகுத்தனர்.
75 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஜமால் முஹம்மது கல்லூரிக்கு நினைவு பரிசாக பவள விழா கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக