நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா!
ராணிப்பேட்டை, ஜன 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழகச் செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்கள் வழங்கிய புத்தாடைகள் மற்றும் காலண்டர் ஆகியவற்றை ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கிளை கழக பொறுப்பாளர்களுக்கு, ஒன்றிய செயலாளர் வடிவேலு அவர்கள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு மற்றும் துணை அமைப்பாளர்கள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், துணை செயலாளர்கள் முகம்மது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், ஒன்றிய பொருளாளர், சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகம்,அரிகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக