என்எல்சி சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; என்எல்சி பிஎம்எஸ் சங்கத்தினர் என்எல்சி தலைவரை சந்தித்து மனு அளித்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

என்எல்சி சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; என்எல்சி பிஎம்எஸ் சங்கத்தினர் என்எல்சி தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.


நெய்வேலி என்எல்சி பிஎம்எஸ் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு பிஎம்எஸ் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் என்எல்சி இந்திய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரசன்ன குமார் மேட்டுப்பள்ளி சந்தித்து மனு அளித்தனர்.


அதில், என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். என்எல்சி சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும்பொழுது W,0 கடை நிலை தொழிலாளருக்கு W,3 scale வழங்கும் ஊதியத்தை வழங்கிட வேண்டும், என்எல்சி அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டாமல் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். 


மேலும் என்எல்சி நிறுவனத்திற்காக சுமார் 40,000 ஏக்கர் நிலம், வீடு எடுக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை இவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி தகுதிக் கேற்ப நிரந்தர வேலை தரவேண்டும். உயிரிழந்த என்எல்சி தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிரந்தர வேலை வாய்ப்பு தரவேண்டும். என்எல்சி பொது மருத்துவமனை யில் உயர்தரமான மருத் துவ சிகிச்சை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். 


உடன் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், என்எல்சி மஸ்தூர் சங்கதலைவர் வீரவன்னிய ராஜா, செயலாளர் சகா தேவ்ராவ், மற்றும் நிர்வாகிகள்  அன்பழகன், தியாகராஜன், சண்முகம், விக்னேஷ், ராஜு அருள் முருகன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad