காவு வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; சுகாதாரம் இல்லாத குடிநீரால் டெங்கு, மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

காவு வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; சுகாதாரம் இல்லாத குடிநீரால் டெங்கு, மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.


வடலூர் நகராட்சியில் காவு வாங்க காத்திருக்கும் நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது யார் தலையில் விழும் என்ற அச்சத்தால் உடனடியாக அந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் நடேசனார் நகர்,சவேரியார் நகர் உள்ளது. இங்கு சுமார்  5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் வடலூர்  பேரூராட்சியாக இருந்த போது கடந்த சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. 


குடியிருப்புகள் ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து ஆங்காங்கே கான்கிரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள படிக்கட்டுகள் இடிந்து காணப்படுகிறது. இந்த படிக்கட்டுகள் மீது ஏறினால் கீழே  விழுந்து உயிர் பலி  கண்டிப்பாக ஏற்படும். மேலும் வேகமாக சூறைக்காற்று வீசினால் உடனே இடிந்து விழுந்து விடும் நிலையில் இந்த தொட்டி உள்ளது.


இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் உள்ள மோட்டார் பம்பு அறையும் எந்த வித பாதுகாப்பு இன்றியும் திறந்த வெளியில் உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில்: இந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பின்னர் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டும் சுத்தம் செய்தனர். ஆனால் ஆனால் இதனால் வரையில் கடந்த 13 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் சுத்தம் செய்வதற்கு இந்த படிக்கட்டுகளில் ஏறினால் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இவ்வாறு சுத்தம் செய்யப்படாத குடிநீரை இப்பகுதியை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் குடித்து வருவதால் மர்ம காய்ச்சல் அடிக்கடி வருகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்குள் நான்கு நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐந்து வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.


இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சுமார் மூன்று அடிக்கு மிகாமல் மண் இருக்கும். இதனால் குடிநீரில்  மாசு கலந்து வருகிறது. இது குறித்து வடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதனால் வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து வெளியாகி கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உயிர் பலி ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து அல்லது அகற்றி பொது மக்களின் அச்சத்தைப்போக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad