கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இதில் சுரங்கம் ஒன்று, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் என்எல்சி அனல் மின் நிலையம் இரண்டில் யூனிட் மூன்றில் புதுகூரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு வயது 28 மற்றும் ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் வயது 21 இரண்டு பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது, அங்கு இருந்த சக தொழிலாளி அவர்களை மீட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Post Top Ad
புதன், 8 ஜனவரி, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக