துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் - நடிகர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் - நடிகர்கள் பங்கேற்பு.

ஐக்கிய அரபு அமீரகத் துபாய் ஊத் மேத்தா பகுதியில் தனியார் பள்ளியில்  உள்ள பாகிஸ்தான் ஆடிட்டோரியத்தில்  அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின்  தலைவி  டாக்டர் ஷீலா தலைமையில்  மிக பிரமாண்டமான பொங்கல்  கொண்டாட்டம் 200 பெண்களின் முளைப்பாரி எடுத்து வர, 150 பெண்கள் கும்மியாட்டம் ஆட100 பேர் சிலம்பாட்டம் ஆட பல்வேறு ஆடல், பாடல், சிலம்பாட்டம், நடனம், கோலம் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி, உறியடி போட்டி, ஹென்னா போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு காலையில் ஹரிணியும் மாலையில்  ஆர்ஜே மாயாவும் தொகுத்து வழங்க  சிறப்பாக நடைபெற்றது. 


மேலும் கோலம் போட்டிக்கு நடுவராக யூடூப்பர் மற்றும் டிவி புகழ் பிரியா சரவணன் தம்பதிகள் கலந்துகொண்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரக அரசில் உயர் பொறுப்பு வகிக்கும்  லைலா ரஹால் அல் அத்ஃபானி மற்றும் அமீரக  அரசில் உயர் பொறுப்புவகிக்கும் அமீரக தொழிலதிபர் யாகூப் அலி மேலும் தமிழ் நாட்டில் இருந்து விஜய் டிவி  பிக்பாஸ் ஜூலி, மேலும் சிறப்பு விருந்தினர்களாக, தமிழக குரல் தொலைக்காட்சி தமிழக குரல் நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் kamal  kvl ,ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, துபாய்  ஈமான் நிர்வாகி அஸ்கர்,  டிக்டாக் புல்லிங்கோ ஷாநவாஸ், இன்ஸ்டா நசீர், இன்ஸ்டா மாங்கனி, தமிழ் செல்வி, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை  நிருபர் நஜீம் மரிக்கா, மண்ணை சுரேஷ் உள்ளிட்டோர் மற்றும் மேலும்  பார்வையாளர்களாக  டிக்டாக் பிரபலங்கள், 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்  மற்றும் பொதுமக்கள்  உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு  கலந்துகொண்டனர். 


நிகழ்ச்சியின் நிறைவாக  அமீரக தமிழ் சங்கத்தின்  டாக்டர் தலைவி  ஷீலா நன்றி  கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும்   நன்றிகளை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad