நெய்வேலியை அடுத்த ஏ குறவன் குப்பத்தில் உள்ள நியூ லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நெய்வேலியை அடுத்த ஏ குறவன் குப்பத்தில் உள்ள நியூ லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா.


கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ  குறவன் குப்பத்தில் உள்ள  நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் சார்பில் டிவைன் கிராஸ் மிஷன்  மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் நியூலைட்மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் இல்லத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தசை பயிற்சியாளர் சசிகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சகாய பாக்கியம் அனைவரையும் வரவேற்றார் ஜே.பி.ஏ மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர்  உமாஐயர் முன்னிலை வகித்தார் மனநல நிபுணர் சகாய ராஜா தலைமை விதித்தார்  சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவின் டிவைன் யூ சபையின் தலைவி  ரோஸ்மேரி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற பயிற்சி மற்றும் கடின உழைப்பு அவசியம்  மேலும் ஆசிரியர் கூறும் பயிற்சிகள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்  என வாழ்த்துரை வழங்கினார்.


பெங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, டிரஸ்டி ராஜாமணி புத்தாடைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  உமாஐயர் பரிசுகளை மற்றும் இனிப்புகள் வழங்கினார், தொடர்ந்து பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பள்ளியின் சிறப்பாசிரியர்கள் , பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்கள்  மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  இறுதியில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad