கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் வடலூர், ஆபத்தானபுரம், வடக்குத்து, சேப்பளாநத்தம், மீன்சுருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, காடாம்புலியூர், பண்ருட்டி, மருவாய், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்திலில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்த்து வருகின்றனர்.
அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வடலூர் ஆட்டு சந்தைக்கு விற்பனை செய்வது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இந்த ஆடுகளை வாங்குவதற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்திலிருந்தும் பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்கிச் சென்றனர்.
இன்று ஒரு ஆட்டின் விலை குறைந்த விலை 5000 லிருந்து அதிகபட்ச விலை 12,500 வரை விற்பனை செய்தனர் இன்று ஒரு நாள் மட்டும் 1 1/2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக