இந்நிலையில் வள்ளலார் சபை வளாகத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது, என்ன குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் கழிவுநீர் அனைத்தும் சாக்கடை போல் தேங்கியுள்ளது இதனால் கடும் துர்நாற்றம் பேசுவதோடு நோய் தொற்று பரவும் அவல நிலை தொடர்கிறது மேலும் சபை வளாகத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் சன்மார்க்க அன்பர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
வள்ளலார் சத்திய ஞான சபை சர்வதேச மைய அமைக்கும் அளவிற்கு பெயர் பெற்றிருந்தாலும் வள்ளலார் தெய்வ நிலையை அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே முகசொலிப்பை ஏற்படுத்தி வருகிறது, ஜோதி தரிசன விழாவை காண பெருந்திரளான கூட்டம் வள்ளலார் சபை திடலில் கூடும் நிலையில் இதுபோன்று பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிவறைகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக