குறிஞ்சிப்பாடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

குறிஞ்சிப்பாடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, குறிஞ்சிப்பாடி வருவாய் வட்ட வட்டாட்சியர் அசோகன் தலைமையில் நடைபெற்றது பேரணியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவிகள் கலந்துகொண்டு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்களிப்பதே சிறந்தது ,நான் நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற வாசகத்தை உடைய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.


மேற்படி பேரணியில் திருவள்ளூர் கலைக் கல்லூரி 130 மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad