கடலூர் மாவட்டம் வடலூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே தொடங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு வழியாக சென்று இறுதியில் வடலூர் விருத்தாச்சலம் சாலையில் உள்ள மசூதி அருகே நிறைவு பெற்றது.
பேரணியில் வடலூர் ஏரிஸ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதே ஆகிய சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு பேரணையாக சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக