இந்த நிலையில் பாலாஜி ஒரு லட்ச ரூபாய் ஏலசீட்டு தனது கிராமத்தில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது, இந்த ஏல சீட்டில் திருநாவுக்கரசு உள்ளார் இந்த நிலையில் நேற்று ஏலச்சீட்டு விடப்பட்டுள்ளது பாலாஜி திருநாவுக்கரசிடம் ஏல சீட்டு பணம் கேட்டுள்ளார் அப்போது திருநாவுக்கரசு தனக்குத் தரவேண்டிய வட்டிப் பணத்தை முதலில் கொடுடா நான் தருகிறேன் என்று கூறி பாலாஜியிடம் கேட்டுள்ளார் இதில் இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது பின்னர் இரண்டு பேரும் அடித்துக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை குத்தி உள்ளார், இதில் பாலாஜி நிலைத்தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இதனை தடுக்கச் சென்ற பாலாஜி சித்தப்பா மற்றும் உறவினருக்கும் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன, இதனை அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் பட்ட இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு கைது செய்தனர், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் (நண்பனையே) விசிக பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக