திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து திருப்பூர் மாநகராட்சி அரண்மனை புதூர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா கிறிஸ்துராஜ் அவர்கள் பார்வையிட்டார் இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீ. உதயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த மருத்துவ முகாம்களில் அந்தப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர் மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாதம் தோறும் சுழற்சி முறையில் மாற்று திறனாளிகளுக்கு
மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக