அனுப்பர்பாளையம் சிற்ப கலைஞர் ஆனந்துக்கு திமுக செயலாளர் ரத்தினசாமி சான்றிதழ் வழங்கினார்
திருப்பூர் 14 வது வார்டு அனுப்பர்பாளையத்தில் உள்ள மர சிற்ப கலைஞர் சிற்பி ஆனந்த் அவர்களுக்கு தாய் அறக்கட்டளையின் சார்பாக மர சிற்ப கலைஞர் பட்டமளிக்கப்பட்ட சான்றிதழை 14 வது வார்டு திமுக செயலாளர், வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளரும், கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான மு.ரத்தினசாமி அவர்கள் வழங்கினார். அனுப்பர்பாளையம் பகுதியில் மர சிற்ப கலைக்கூடம் வைத்திருக்கும் சிற்பி ஆனந்த் அவர்கள் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்களின் படத்தை முட்டையில் செதுக்கி அப்துல் கலாம் அய்யாவிடம் பாராட்டு சான்றிதழை பெற்றவர். மேலும் நுட்பமான மர சிற்ப வேலைகளை சிறப்புடன் செய்து தந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தாய் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக