இதற்காக என்எல்சி சுரங்க பகுதிகளிலும், அனல் மின் நிலையப் பகுதிகளிலும், என்எல்சி மருத்துவமனை பகுதிகளிலும், நகர நிர்வாகம் என ஒன்பது இடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கான தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் என 43 பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை, தேர்தல் பொறுப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை 4 மணி அளவில் தேர்தல், முடிவடைந்து, வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மற்றும் என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் என ஆர்வத்துடன் அனைவரும் பணியாற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக