அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் பிறந்த நாளில் அன்னதானம், சிறப்பு பூஜை, - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் பிறந்த நாளில் அன்னதானம், சிறப்பு பூஜை,


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.விவசாய மணி அவர்கள் பிறந்த நாளில் அன்னதானம், சிறப்பு பூஜை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் அய்யா ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்களின் 59 ஆவது அகவை பெருவிழா திருப்பூர் பிரட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் படை சூழ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இந்த நிகழ்வில் தொடர்ச்சியாக காலேஜ் ரோடு நிர்வாகி சிவா ஏற்பாட்டில் வீர மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ராமமூர்த்தி நகர் நிர்வாகிகள் வேலுச்சாமி, தாமோதரன் ஏற்பாட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஆறுமுகம் ஏற்பாட்டில் விசுவாஸ் மாஹால் எதிரில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. மேலும் பள்ளிபாளையம் கிளை அலுவலகத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜாபர் அலி, நிக்கோலஸ் மணி ஏற்பாட்டில் கேக் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.  முன்னதாக தலைவர் ஜிகே விவசாய மணி அவர்களை ரேக்ளா மாட்டு வண்டியில் அழைத்துவரப்பட்டார்.

தெக்கலூர் எரிப்பாளையம் பகுதியில் நிர்வாகி மஞ்சுளா ஏற்பாட்டில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 15 வேலம்பாளையம் நிர்வாகிகள் நாகேந்திரன், வீரலட்சுமி ஏற்பாட்டில் டிஸோ ஆதரவற்றோர் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.

பின்னர் இரவு  பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அனைவரது முன்னிலையில் கேக் வெட்டி அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் சங்க நிர்வாகிகள் அனைவரும்  பாரபட்சமின்றி இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்  தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad