ஆடுகள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி ஊரில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்காக புத்தேரி ஊரின் தெற்கு பக்கம் உள்ள காட்டு பகுதிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற 11 ஆடுகள் காட்டு பகுதியில் இறந்து கிடந்தன. இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி ஊரின் ஏழை மக்களின் வாழ்வாதாரமான ஆடுகள் இறந்தது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக