ஆம்பூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது. கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்த போது காரில் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் இருப்பது கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 45 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 500 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜாவித், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியை சேர்ந்த முஜமில், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த முஹம்மத் அப்ரார் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த ஆம்பூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக