கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 2025 ஆம் ஆண்டு தேசிய சாலை பாதுகாப்பு மாதம் சங்கராபுரத்தில் கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி அவர்களின் உத்தரவுகிணங்க கோட்டப் பொறியாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பேரணி சங்கராபுரம் இந்தியன் வங்கியில் தொடங்கி சங்கராபுரம் லைட் ஹவுஸ் வரை நடத்தப்பட்டது.
பின்னர் லைட் ஹவுஸ் அருகே நின்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார்கள். உடன் சாலை பாதுகாப்பு அலகு (விழுப்புரம் ) கோட்டப் பொறியாளர் ஸ்ரீ காந்த் அவர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக பேசினார்.
மேலும் அவரைத் தொடர்ந்து, உதவி கோட்ட பொறியாளர்கள் கா.சிவசுப்ரமணியன் மற்றும் கண்ணன் உதவி பொறியாளர்கள், திறன்மிகு உதவியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக