நீலகிரி மாவட்டத்தில் வானிலை மையம் அறிவித்தது போல் பரவலாக பனிமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டியை நடந்துகொண்டிருப்பதால் பாரம்பரிய கலாச்சாரவெள்ளை உடையில் இந்த பனிமூட்ட மழையில் குழந்தைகளுடன் உற்சாகமாக ஹெத்தையம்மன் கோயிலுக்கு மாவட்டம் முழுவதிலுமுள்ள படுக சமுதாய மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மே மாதம் போல் உள்ள பனிமூட்டம் சாரல் மழை ஆகிய காலநிலையை உற்சாகத்துடன் அனுபவித்து மகிழ்ந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக