குடிநீர் கிணற்றில் குளிக்க சென்று மாட்டிக்கொண்ட இரண்டு கரடிகள் மீட்ட வனத்துறை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு கிராஸ் ஹில் பேக்டரிக்கு கீழ் தும்பூரை ஒட்டிய இடத்தில் சேலவை தும்பூர் அரவேனுபகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. அதனருகே தனியார் தேயிலை தோட்டம் சுமார் 5 ஏக்கர் ஆனது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் பராமரிப்பின்றி தேயிலை செடிகள் தேயிலை மரமாக மாரியுள்ளதால் கரடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் புகளிடமாக உள்ளது. குடிநீர் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க மோட்டாரை இயக்கும் பணியில் வெவ்வேறு பகுதியை சேர்ந்த மூன்று ஆபரேட்டர்கள் பயத்துடன் சென்று மக்களின் குடிநீர் தேவைக்காக மோட்டாரை இயக்கிவரும் நிலையில் கிணற்றின் மேல் தண்ணீர் அளவை பார்க்கும் சிறிய மூடிவழியே பார்த்த போது குடிநீர் கிணற்றில் குளிக்க சென்று மாட்டிக்கொண்டதுபோல் இரண்டு கரடிகள் தத்தளிப்பதை கண்ட பம்ப் ஆப்பரேட்டர் கோத்தகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக ரேஞ்சர் திரு. செல்வராஜ் அவர்களின் தலைமையில் வந்த குழுவினர் இரண்டு ஏணிகளை இணைத்து கிணற்றுக்குள் இறக்கினார்கள் அந்த ஏணி வழியே ஒன்றன் பின் ஒன்றாக மேலே ஏறிவந்த இரண்டு கரடிகள் புதர் பகுதிக்குள் ஓடியது. பொதுமக்களின் நலன் கருதி அந்த சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கியிருக்கும் கரடி மற்றும் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் குடிநீர் கிணற்று நீரை வெளியேற்றி தூர்வாரி சுத்தம் செய்வதுடன் சிறிய அளவிளான மேல் மூடி அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து கரடியை மீட்ட கோத்தகிரி வனத்துறை ரேஞ்சர் செல்வராஜுடன் இணைந்து சமயோசிதமாக செயற்பட்ட வனத்துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக