திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரே நாளில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இந்து முன்னணியினர் காவல் துறை அனுமதி இன்றி போராட்டம் நடத்தினர் . இதனால் திருப்பரங்குன்றம் போலீசார் இரு அமைப்பினர் மீதும் மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி மலைக்கு மேல் கந்தூரி கொடுக்க ஆடுடன் செல்ல முயன்ற ஐக்கிய ஜமாஅத் உள்பட அமைப்புகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.
திருப்பரங்குன்றம் மலை மேல் கந்தூரி கொடுப்பதற்காக ஆளுடன் சென்ற ஐக்கிய ஜமாஅத் எஸ்டிபிஐ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீது தடை மீறி மலைக்கு செல்ல முயன்றவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி பொதுவெளியில் கூடுதல் , ஊர்வலமாக செல்லுதல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல் இந்து முன்னணி அமைப்பினர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அனுமதி இன்றி சன்னதி தெருவில் ஊர்வலமாக வந்தனர்.இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலமாக சென்றது, பொதுவெளியில் கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் இழைத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக