போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் விழிப்புணர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் விழிப்புணர்வு !

குடியாத்தம் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் விழிப்புணர்வு பேரணி


குடியாத்தம் ,ஜன 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை பாதுகாப்பு மற்றும்  தலை கவசம்  விழிப்புணர்வு பேரணி இன்று மாலை காமராஜ் பாலம் லட்சுமி தியேட்டர் அருகில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளர்  T ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சிகள் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் 
இன இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம்
வாகன காப்பீடு புகை சான்று மற்றும் தலை கவசம் வழங்க விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் டி பார்த்தசாரதி வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா போக்கு வரத்து காவல் உதவி ஆய்வாளர் சாமி கண்ணு இருசக்கர வாகன வியாபாரி சங்கத் தலைவர் ரமேஷ் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நரிக்குறவர் இளைஞர்கள்  தலைகவசம் அணிந்து கொண்டு முக்கிய வீதிகளில் பேரணையாக சென்றார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad