குடியாத்தம் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம் ,ஜன,10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார்
வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்
வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் வரவேற்றார் இதில் விவசாய பிரதி நிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் விவசாயிகள் நலனுக்காக வண்டல் மண் பயன்படவில்லை மாறாக இடைத்தரகர் மூலம் வியாபாரம் நடைபெறுகிறது வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்குமா விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் மனு கொடுத்தால் அடுத்த மாத கூட்டத்தில் அதற்கு பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பி விட்டோம் என்று பதில் கிடைக்கிறது தவிர. கோரிக்கைக்காண பதில்கள் இல்லை பதில் கிடைக்க உரிய நடவடி க்கை எடுக்கப்படுமா
சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது வனத்தையும் வன விலங்குகளையும் விவசாயிகள் விவசாயத்தையும் பாதுகாக்க வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் கூட நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து உள்ளது அதை சீர் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் இந்தக் கூட்டத்தில் வனத்துறை அலுவலர் குமரேசன்
தோட்டக்கலை அலுவலர் தமிழரசி
நகரமைப்பு அலுவலர் சீனிவாசன்
சுகாதாரத்துறை டேவிட் ஆதிராவிடத் துறை வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் வருவாய் ஆய்வாளர்கள்
அசோக் குமார் ( கிழக்கு ) பிா்கா
கார்த்திக் ( மேற்கு ) பிா்கா புகழரசன் (வளத்துாா் ) பிா்கா ஆகியோர் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக