சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி - குடியரசு தின விழா
காரைக்குடி விசாலயன்கோட்டையில், கலாம் கவி கிராமத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் 76வது குடியரசு தின விழா கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மத்திய தீவிரவாத மற்றும் விமான கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிரடி படையின் கமாண்டோ கந்தன்.டி. மற்றும் சுபேதார் மேஜர் உதவி ஆட்சேர்ப்பு அலுவலர் ஆர். தர்மராஜ் (ஆட்சேர்ப்பு அலுவலகம், ஹரியாணா), கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல்வர் (பொறுப்பு )முனைவர் மா .விஷ்ணுப்பிரியா, மற்றும் செயலர் திரு . எல்.கந்தப்பழம், ஆலோசகர் முனைவர் தர்மராஜ், சேது வள்ளியம்மாள் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. விவேகானந்தன் தலைமையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
கல்லூரியின் NCC மாணவர்கள் அணிவகுப்புடன் தலைமை விருந்தினர்களுக்கு மரியாதையுடன் வரவேற்பளித்தனர். அத்துடன், தலைமை விருந்தினர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.
மாணவர்கள் நாட்டுபற்று, தேசிய ஒருமைப்பாடு சார்ந்த பேச்சுகளும் பாடல்கள் பாடியும் மிகச் சிறப்பான முறையில் நிகழ்த்தினர்.
தலைமை விருந்தினர்கள் அவர்களின் சிறப்பு உரையில் நாட்டுப்பற்றின் அவசியம் மற்றும் நாட்டிற்காக சேவை செய்வதன் மகத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்திய ராணுவ படையில் சேர்வது குறித்த விழிப்புணர்வையும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசினார்கள்.
மாணவர் டேவிட் அவர்களுக்கு கேடட் சீனியர் அண்டர் ஆபிசர் ரேங்க் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாணவர்கள் யோகலட்சுமி,ராம் அரவிந்த், அஜய் அவர்களுக்கு கேடட் அண்டர் ஆபீஸர் ரேங்க் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், 2025 இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு படைவீரர்கள் பாசறை சிவகங்கை சீமை மற்றும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி இணைந்து நடத்திய ஆண் மற்றும் பெண்கள் இரு பாலர்கள் கலந்து கொண்ட மாபெரும் 1600 மீட்டர் மினி மாரத்தான் போட்டியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை பாராட்டி அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சார்பாக சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த விழா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாட்டின் ஒற்றுமை, உரிமை மற்றும் பொறுப்பை உணர்த்தியது.
இந்நிகழ்ச்சியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் திரு.ரகு, செல்வி. சங்கீதா மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் கவியரசு அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக