நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆன மறவன் குளம், வடகரை,விரிசன்குளம், விடத் குளம் ஆகிய கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர்களின் பதவி காலம் முடிந்த நிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.வடகரை கிராமத்தில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யவில்லை மேலும் குடிநீர் வசதி இருந்தும் தண்ணீர் திறந்து விட அதற்கான காலிபனியிடம்15 ஆண்டுகள் ஆகியும் நிரப்ப படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறினர். மேலும் மகளிர் சுயவலாகம் பால்வாடி வளாகம் ரேஷன் கடை ஆகியவற்றை புதியதாக கட்டித் தரும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக