திருமங்கலத்தில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

திருமங்கலத்தில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.


திருமங்கலத்தில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.


இடது பக்க கையில் சதை பகுதி முழுவதையும் நாய் கடித்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் ஐந்தாவது தெருவில் வசித்து வரும் கண்ணன் -  ஜான்சிராணி தம்பதியினர் இவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு வெளிநாட்டு ரக நாய்கள் வளர்த்து வருகின்றனர்.ஜான்சி ராணியின் மகன் சென்னையில் வசித்து வருவதால் கண்ணன் - ஜான்சி ராணி இருவர் மட்டுமே வீட்டிலிருந்து நாய்களை பராமரித்து வருகின்றனர்.நிலையில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக மாலை ஐந்து மணி அளவில் ஜான்சி ராணி சென்றுள்ளார்.அப்போதுநாயின் அருகில் இருந்த துணியை எடுக்க முயன்ற போது திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது பாய்ந்து கடித்து குதறியதில் அவரது இடது கை பலத்த சேதம் அடைந்தது அலறி துடித்த ஜான்சிராணிகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர்வெளியே வந்தாலும் நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து மெதுவாக ஜான்சி ராணி கீழே இறங்கி வந்துள்ளார் நேற்று தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜான்சி ராணி இடது கை மிகவும் சேதம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட நாய் வளர்த்தவரையே கடித்துப் புதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாடியில் இருக்கும் நாய் கட்டிப்போட்டு வைக்காததால் அப்பகுதியில் குடியிருக்கும் அனைவரும் வெளியேவர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad