கோத்தகிரியில் இன்று உறைபனி ஆரம்பித்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக உதகையில் உறைபனி ஆரம்பித்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜனவரி 5) முதல் உறைபனி பெய்தது புல்வெளிகள் பகுதிகளில் வெண்போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மக்கள் காஷ்மீரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த உறைபனியால் தேயிலை செடிகளின் இலைகள் கருகி விஷத்தன்மையை இழந்து மீண்டும் கோடை மழைப்பொழிவின் போது துளிர்த்து நல்லதொரு வளர்ச்சியில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்க உறுதுணையாக இயற்கை இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக