மேலதுறையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் காரைக்குளம் ஊராட்சி மேலதுறையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு பெற்றுக்கொண்டார்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறியதோடு, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார். அக்கிராமத்தில் நிறைவேற்ற திட்டப் பணிகளையும் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு சுப. மதியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் முத்துக்குமார், காரைகுளம் ஊராட்சி செயலாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் கவிதா, வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ் செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் வினோத்குமார் மற்றும் மனோஜ் குமார், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக