வடபுதூர் ஊராட்சி விவசாயிகளுடன் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள்
கோவை : கிராமப்புற விவசாய பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக, வடபுதூர் ஊராட்சி விவசாயிகளிடம், அமிர்தா வேளாண்மை கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் விழிப்புணர்வு நடத்தினர்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம் மற்றும் கால்நடைகளில் புழுக்கள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. டாக்டர் எம்.பிரான் தலைமையில் கால்நடைகளுக்கு கனிம கலவையின் மாதிரிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. தென்னை விவசாயிகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளான கள்ளிப்பூச்சி, காண்டாமிருக வண்டுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
மாணவர்கள் ராகுல், மீனாட்சி, திவ்யா, ஆர்யா, பார்த்திகா, ஷோபிகா, டான் பாபு , ஹரிநந்தன், நேதாஜி, பிரபாஜோத், நிகில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், ஆசிரியர்கள் முனைவர் பி.சிவராஜ், முனைவர் இ.சத்யப்பிரியா, முனைவர். எம். இனியகுமார், முனைவர். கே. மனோன்மணி, முனைவர். எம். பிரான் தலைமை தாங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக