ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாரதி.. உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ்.. தலைமையிலான போலீசார் சோளிங்கரை சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழா என்பதால் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமம் திரௌபதி அம்மன் கோவில் அருகே மறைவான இடத்தில் காருடன் ஒரு பெண் நான்கு ஆண் கும்பல் நீண்ட நேரம் பதுங்கி இருப்பது போலிசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் உடனடியாக விரைந்து சென்று போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர், அப்பொழுது போது அந்த கும்பலில் இருந்து தமிழ்ச்செல்வி என்ற பெண் தப்பி ஓடிவிட்டார்.
அதில் நான்கு பேர் மட்டும் மடக்கி பிடித்து, சோதனை செய்த பொழுது காரில் பட்டாகத்தி உள்ளிட்ட திருடுவதற்கான பொருட்கள் இருந்ததை கண்ட போலீசார், தீவிரமாக அவர்களை விசாரித்த பொழுது விசாரணையில் சுதன் (27) பாராஞ்சி கிராமம் அண்ணா நகர், ஞானபிரகாஷ் (25) பஜனை கோவில் தெரு, செல்வமந்தை மேல் களத்தூர், விக்கி (24) கோவில் தெரு சோளிங்கர், விஜய் (24), பாராஞ்சி கிராமம் என தெரிய வந்தது மேலும் போலீசார் விசாரணை தீவிரபடுத்தியதில் இந்த ஐந்து பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துக்கொண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி காரில் சென்று கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்தது.
இதன் பேரில் சோளிங்கர் போலீசார் கத்தி கார் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர், மேலும் இந்த நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக