குறிஞ்சிப்பாடி கஞ்சமநாதன் பேட்டையில் அருள்மிகு வேலவிநாயகர் திருக்கோயில் கரிநாள் பாரிவேட்டை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

குறிஞ்சிப்பாடி கஞ்சமநாதன் பேட்டையில் அருள்மிகு வேலவிநாயகர் திருக்கோயில் கரிநாள் பாரிவேட்டை திருவிழா.


தமிழ்நாட்டிலேயே வேறு எந்த கோயிலும் இல்லாத தானியமரம் இங்கு உள்ளதால் இந்த கோயிலின் சிறப்பு, இந்த தானிய மரத்திற்கு எள் தீபம்  ஏற்றி வழிபட்டால்  சனி தோஷம் மற்றும் திருமணத்தடை நீங்கும் என ஐதீகம், திருமணமாகாத கன்னிப்பெண்கள் மற்றும் ஆண்கள் பொதுமக்கள் உட்பட  ஏராளமான ஏராளமானோர் தானிய மரத்திற்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கஞ்சமநாதன் பேட்டை அருள்மிகு வேல விநாயகர் திருக்கோயிலில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு கரிநாள் பாரிவேட்டை  திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்  காலை 7- மணிக்கு ஸ்ரீ வேல விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று மூலவர் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு ஊர் முழுவதும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


இத் திருக்கோயிலி ல் அமைந்திருக்கும் மூலவர் ஸ்ரீ வேலவிநாயகர் பெருமான் எதிர்புறத்தில் உள்ள சனீஸ்வர பகவானின் விருச்சமான தானிய மரத்திற்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் மற்றும் திருமணத்தடை  நீங்கும் என ஐதீகம் உள்ளதால்  திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆண்கள் பக்தர்கள் உள்பட  எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த தானிய மரம் தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லை என்பது  இந்த கோயிலின்  தனிச்சிறப்பாகும். 


இந்நிகழ்ச்சியை அறங்காவலர் ஆர்.சிவஞானம், ஆய்வர் பா. வசந்தம், நிர்வாக அதிகாரி ச.சிவக்குமார் பி.ராஜமாணிக்கம், ஆர். சிவஞானம், கே. செல்வத்தாண்டவன், மற்றும் கஞ்சமநாதன்பேட்டை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad