வடலூரில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

வடலூரில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கடலூர் மாவட்டம் வடலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வடலூரில், கடலூர் செல்லும் சாலையில் அய்யன் ஏரி பகுதியில் வடலூர் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் எஸ்ஐ ராஜாங்கம், மற்றும் சிறப்பு உதவியாளர் விஜயராஜ், தலைமை காவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இளைஞரையும், வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசன் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ் பாக்கெட் மற்றும் கூலிப் ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.


இதை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர், இதில் வடலூர் ஞானப்பிரகாசம் தெருவை சேர்ந்த வின்சென்ட் மகன் விக்னேஷ் (32)என்பதும் மேலும் அவருடைய வீட்டை சோதனை செய்தபோது 7 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, வடலூர் போலிஸார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad