தற்போது AI தொழில்நுட்பம் இன்னும் வளர்ந்து வருகிறது. இருந்த போதிலும் மாணாக்கர்களின் அறிவியல் வளர்ச்சியினை மேலும் பெருக்குதல் நோக்கத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓர் அறிவியல் மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வேண்டுகின்றனர்.
மேலும் இது குறித்து எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ட்விட்டர் பதிவில் கோரிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக