குடியாத்தம் , ஜன 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று 23-1-25 தேதி வேலூர் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் வனச்சரகம் கனியம்பாடி பீட் & வனப் பகுதியில் சந்தேகப்படும்படியிருந்த ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த 1.சாமிநாதன் (வயது 38) 2.ராஜசெல்வம் (வயது59) ஆகியோரிடம் சோதனையிட்டதில் உயிருடன் இருந்த எறும்புத் திண்ணியை கடத்த முயன்றது கண்டு பிடிக்கபட்டு,வன உயிரினத்தை கடத்த முயன்ற குற்ற வழக்கில் மேற்கண்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் இக் குற்றம் சம்மந்தமாக விசாரனை நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக