மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நிரப்பிடாத மாவட்ட நிர்வாகம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவர் இல்லாததால் மருத்துவமணைக்கு வரும் நோயாளிகளை சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பும் அவலநிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு மானாமதுரை மருத்துவமனையில் மருத்துவர்களை நிரப்பிட வலியுறுத்தி பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மேலும் கடந்த 16ஆம் தேதியன்று தேவி என்ற பெண்மணியை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாததால் சிவகங்கை மருத்துவமனைக்கு போகும்படி ஊழியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக மேற்படி நோயாளியை சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டும் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துள்ளது பெரிய வருகிறது. ஒரு வேளை மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பலமுறை எடுத்து சொல்லியும் இன்னும் மருத்துவர்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மனோர அரசு மருத்துவமனையில் மருத்துவர் களை நிரப்பிட வலியுறுத்தி பொதுமக்களாகிய எங்களுக்கு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி தரும்படியும் மிகப்பணிவுடன் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக