கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது வருகிறது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது வருகிறது

 


காரைக்குடியில் நாளை 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதை முன்னிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது வருகிறது.முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் முறையாக சென்றடைகிறதா என தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.நாளை காலை திருச்சி விமான நிலைய்ம் வரும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வருகை தருகிறார்.சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.காரைக்குடி மாநகரம் சார்பில் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர்அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடிக்கு மேல் நிதியில்,30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லக்ஷ்மி வளர் தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இங்கு   பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்கள் வைக்கப்பட உள்ளது.இங்கு தரைத்தளத்தில் தமிழ்நூல்கள், முதல் தளத்தில் செமினார் ஹால், 2ம் தளத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் விழாப் பேருரையாற்றுகிறார்.அவ்விழாவில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நூலகத்திற்கான நோக்க உரையும்,கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையும் ஆற்றுகின்றனர்.இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன்,தங்கம் தென்னரசு,எஸ்.ரகுபதி,ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,மு.பெ.சாமிநாதன்,வீ.மெய்யநாதன்,கார்த்தி சிதம்பரம் எம்.பி,மாங்குடி எம்.எல்.ஏ மாற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.பின்னர் அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் மாலை 5 மணியளவில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளை சந்தித்து கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.ஆலோசனை கூட்டத்திற்கு வரும் முதல்வருக்கு மாநகரின் முக்கிய வீதிகளின் இருபுறமும் தொண்டர்கள்,பொதுமக்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.  இரவு காரைக்குடியில் முதல்வர் தங்குகிறார்.தொடர்ந்து 22ம் தேதி காரைக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை செல்கிறார்.அவருக்கு குன்றக்குடி,திருப்பத்தூர் பைபாஸ் சாலை மற்றும் அரளிக்கோட்டை ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க அந்தந்த பகுதி நகர,ஒன்றிய,பேரூர்,ஊராட்சி கிளை கழக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பின்னர் காலை 10 மணியளவில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கத்தில் புதிதாக அமைய உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும். முடிவுற்ற திட்டங்களை துவக்கியும் வைக்கிறார். அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச உள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு 21 மற்றும் 22ம் தேதிகளில் முதல்வர் வருகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் தலைமையில் மாவட்டம் முழுவதும் கொடிக்கம்பங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி, மாங்குடி எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டு நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஆலிசனைகளை வழங்கி சிறப்பாக செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad