பெரும்பாடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

பெரும்பாடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

குடியாத்தம் அடுத்த பெரும்பாடி  ஊராட்சியில்   புதிய அங்கன் வாடி மையம் திறப்பு !


குடியாத்தம் ,ஜன 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா பஞ்சாயத் தலைவர் ஆஷா தேவி செழியன்  தலைமையில் நடைபெற்றது.
யூனியன் கவுன்சிலர் சரஸ்வதி துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சமீம்ரிகானா வர வேற்றார். குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜியன் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி , குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் உத்தரகுமாரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad