குடியாத்தம் ,ஜன 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பென்களுக்கான தடகள குழு விளையாட்டு போட்டிகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜனவரி 7ம் முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று காலை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார். கல்லூரிமுதன்மையர் டாக்டர். ஆர்.அமுதா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து வந்துள்ள மாணவிகள் கபடி கோகோ நீளம் தான்டுதல் வலைபந்து உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் நீளம் தாண்டுதலில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.ராஜாராமன் குடியாத்தம் நகர லயன்ஸ் கிளப் தலைவர் ஜே.பாபு ஆகியோர் கலந்து கொண்டு மெடல்களை அணிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் டாக்டர் திருநாதன், டி.நாராயணன், சீனிவாசன், தீனதயாளன் உள்ளிட்டோர் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ராஜகோபால் பாலிடெக்னிக் உடற்கல்வி ஆசிரியர் டாக்டர் பி.வினோத்குமார் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக