பேரணாம்பட்டு, ஜன 8 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன் ராஜன் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் மகன் பிரபு இவர்கள் தற்போது பேரணாம்பட்டு ரோடு நேதாஜி சவுக் அருகில் அரிசி கடை ஆரம்பித்து அதில் மாதந்தோறும் 1100 ரூபாய் பணம் செலுத்தினால் 12 மாதம் கழித்து பொன்னி அரிசி 7 சிப்பம்
கோல்டு வின்னர் 15 லிட்டர் பிரியாணி அரிசி 5 கிலோ துவரம் பருப்பு 10 கிலோ
உளுத்தம் பருப்பு 8 கிலோ இது போன்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து உள்ளார் பொங்கலுக்கு பரிசு திட்டம் என்று ஆரம்பித்து பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்
பணம் செலுத்தியவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்காமல் தலை மறைவு ஆகிவிட்டார் இதனால் பரிசுத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டியவர்கள் இன்று காலை குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர் மேலும் இதைக் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக