குடியாத்தம் ஜன 8-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லபாடி ஊராட்சி முதலியார் ஏரி பகுதியில் இன்றைய காலை பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மற்றும் இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் வருவாய் ஆய்வாளர் முகிலன் கூட்டுறவு பதிவாளர் தனலட்சுமி தனி அலுவலர் சதீஷ் மற்றும் துணைத் தலைவர் உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக