காட்பாடி, ஜன 8 -
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில்
திடீரென தீப்பற்றி எரிந்த கார் -பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது நண்பர்கள் காட்பாடிக்கு இன்று (ஜனவரி 8) காலை காரில் வந்துகொண்டிருந்தார். சித்தூர் பேருந்து நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரில் புகை வந்து உடனே தீபிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்ததும் காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பித்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக