குடியாத்தம் , ஜன 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. இவர் வளர்க்கும் மாட்டை வீட்டு அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது , அங்கிருந்த 50 அடி ஆழம் கொண்ட உரை கிணற்றில் பசு தவறி விழுந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு கனிமொழி தகவல் கூறினார்.அதன்பேரில் சிறப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்து பசுவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் சீவூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்று உரிமையாளர் நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக