தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே விட்டு விட்டு ஒரு சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கின்றது .
திருநெல்வேலி நெல்லை சந்திப்பு பகுதிகளில் மற்றும் டவுன் பகுதிகளில் தற்போது 13.01.2025 மாலையில் மழை பெய்து வருவதால் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்த சாலையோர வியாபாரிகள் இந்த மழையினால் வாங்கி வைத்திருந்த கரும்பு மஞ்சள் போன்ற சாமான்கள் மழையினால் நனைந்தபடியால் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்
மாவட்டத்திற்கு உட்பட்ட பாளையம்கோட்டை தாலுகா அரியகுளம் கிராம பகுதியில் மற்றும் மானூர் தாலுகா உட்பட்ட பிராஞ்சரி பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் நல்ல மழை ஆங்காங்கே பெய்தது வருகின்றது இதனால் விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்..
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக