குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி ஆயுர்வேத மருத்துவமனையின் சார்பில் ஆயுர்வேத சிறப்பு மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி ஆயுர்வேத மருத்துவமனையின் சார்பில் ஆயுர்வேத சிறப்பு மருத்துவ முகாம் !



  குடியாத்தம் , ஜன 25 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி ஆயுர்வேத மருத்துவமனையின் சார்பில் ஆயுர்வேத சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் p. சௌந்தரராஜன் அவர்களின் ஆலோசனை படி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் s. சுகநாதன் மற்றும் டாக்டர் திவ்யா  சுகநாதன் அவர்கள் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்கள். அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி அனைவரையும் வரவேற்றார் அத்தி ஆயுர்வேத மருத்துவர் கீர்த்தனா  முகாமில்  சுவாச கோளாறு , மூட்டு வலி, ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் அளித்தார்.  இதில்  குடியாத்தம்  பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் k குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் k தங்கராஜ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு அத்தி ஆயுர்வேத மருத்துவமனையின் சார்பில்  புதிய மருந்து கண்டுபிடித்து அதை டாக்டர் s. சுகநாதன் மற்றும் டாக்டர் திவ்யா அவர்கள் மூலம் வெளியிட்டனர்.  அத்தி செவிலியர் கல்லுரி  பேராசிரியர் டாக்டர் சங்கீதா அவர்கள் கலந்துக் கொண்டார். முகாமில் சுமார் 100 நோயாளிகள் பயனடைந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad