ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை மற்றும் அமராவதி காவல் நிலையம் இணைந்து இமைகள் திட்டம் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை மற்றும் அமராவதி காவல் நிலையம் இணைந்து இமைகள் திட்டம் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் அமராவதி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை மற்றும் அமராவதி காவல் நிலையம் இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 23-1-2025 அன்று நடத்தியது.


 ஸ்ரீஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் பள்ளி குழந்தைகளுக்கு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாடகங்கள் மூலம் எடுத்துரைத்தனர். கல்லூரி மாணவியர், பள்ளி குழந்தைகளுக்கு இமைகள் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றையும் விரிவாக எடுத்துரைத்தனர். பள்ளி குழந்தைகளுக்கு வினாடி வினா, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 


முகாமில் இறுதியில் அரையாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற  மாணவியருக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினர். இந்த முகாமில் ஏற்பாட்டை ஸ்ரீ ஸ்ரீஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை பேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் செய்தனர் தலைமை ஆசிரியர் வி. சி.மணிகண்டன், ஆசிரியர்கள் மி.ரீட்டா செவாஸ்டியன், ஷி.கவிதா, கி.ஆனந்தி, முனைவர் தி.ஜெயந்தி, முனைவர் ஸ்ரீபிரியா, அமராவதி அமராவதி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad