குடியாத்தம் ,ஜன 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாநில ஷூட்டிங் பால் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி எஸ் ஓ சான்றிதழ் வழங்கி வாழ்த்து விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .தமிழ்நாடு அளவிலான மாநில ஷூட்டிங் பால் போட்டிகள் ஜனவரி 12 ஆம் தேதி சேலம் டால்பின் விளையாட்டு அகாடமியில் நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டனர், இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷூட்டிங் பால் ஜுனியர் ஆண்கள் பிரிவு அணியினர் தங்கப்பதக்கமும், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இதையடுத்து நேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி சான்றிதழும் மெடலும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட ஷூட்டிங் பால் சங்க செயலாளர் ஆஷா ரமேஷ்பாபுவும் வாழ்த்து தெரிவித்தார்.மேலும் இதையடுத்து ஒடிசா வில் ஜனவரி 17, முதல் 19 வரை நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள வெற்றி பெற்ற மாணவர்கள் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் உள்ள நேத்ரா விளையாட்டு அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்று வருவதாக பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக